Post Page Advertisement [Top]

Tarang Shakti 2026 F-35 Rafale F-16 Tejas Indian Air Force exercise
Tarang Shakti 2026 – Multinational Air Exercise.

வரும் நாட்களில்  உலகின் பல முன்னணி fighter aircraft-கள் இந்திய வான்வெளியில் ஒன்றாக செயல்படுவதை நம் கண்களால் காணலாம்.

அமெரிக்காவின் F-35, பிரான்ஸின் Rafale, UAE-யின் F-16, இந்தியாவின் Rafale, Tejas, Su-30MKI, Mirage-2000, MiG-29, Jaguar உள்ளிட்ட பல aircraft-கள் ஒரே multinational air exercise-ல் பங்கேற்க உள்ளன.

இந்த exercise-ன் பெயர் Tarang Shakti 2026.

இது Indian Air Force (IAF) நடத்தும் இந்த exercise-ன் இரண்டாவது edition, 26 September முதல் 12 October 2026 வரை Rajasthan மாநிலம் Jodhpur-ல் உள்ள Air Force Station மற்றும் அருகிலுள்ள air bases-ல் நடைபெற உள்ளது.

இதில் இந்தியாவுடன் Australia, Bangladesh, France, Germany, Greece, Sri Lanka, UAE மற்றும் USA ஆகிய நாடுகள் தங்களுடைய air assets-உடன் பங்கேற்கின்றன. மேலும் 32 நாடுகள் observer-களாக அதாவது பார்வையாளர்களாக பங்கேற்க உள்ளன.

Tarang Shakti 2026 ஏன் இவ்வளவு முக்கியமானது?

Tarang Shakti என்றால் என்ன?

Tarang Shakti என்பது Indian Air Force நடத்தும் ஒரு Multinational Air Exercise.

இதன் முக்கிய நோக்கம் வெறும் fighter aircraft-களை ஒன்றாக பறக்க விடுவது மட்டுமல்ல.

பல நாடுகளின் air forces ஒன்றாக இணைந்து,

  • Joint Operations

  • Tactical Training

  • Mission Planning

  • Air Combat

  • Air Defence

  • Reconnaissance

  • Airlift

  • Air-to-Air Refuelling

  • Complex Combat Missions

போன்ற பல்வேறு operations-களை ஒன்றாக இணைந்து பயிற்சி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அதாவது, ஒரு உண்மையான conflict situation-ல் பல நாடுகளின் aircraft மற்றும் air forces ஒன்றாக செயல்பட வேண்டியிருந்தால், அவை எவ்வாறு ஒருவருக்கொருவர் coordinate செய்ய வேண்டும் என்பதை practice செய்வது.

IAF Vice Chief Air Marshal Ashutosh Dixit கூறியதாக recent reports தெரிவிப்பது, Operation Sindoor-ல் கிடைத்த operational lessons-ஐ Tarang Shakti-ல் partner countries-ன் operational experience உடன் இணைத்து test செய்ய உள்ளனர் என்பதாகும்.

மேலும் அவர் கூறியபடி, இந்த exercise-ன் நோக்கம் ஒன்றாக கற்றுக்கொள்வது, ஒன்றாக செயல்படுவது மற்றும் எதிர்கால air warfare challenges-க்கு தயாராகுவது ஆகும்.

2026 edition எப்போது நடைபெறுகிறது?

Exercise Tarang Shakti 2026

தேதி: 26 September – 12 October 2026
இடம்: Air Force Station Jodhpur மற்றும் adjoining air bases, Rajasthan
நடத்துவது: Indian Air Force

இந்த exercise-ல் 8 Friendly Foreign Countries air assets-உடன் பங்கேற்கின்றன.

அவை:

🇦🇺 Australia
🇧🇩 Bangladesh
🇫🇷 France
🇩🇪 Germany
🇬🇷 Greece
🇱🇰 Sri Lanka
🇦🇪 UAE
🇺🇸 USA

இதற்கு கூடுதலாக 32 நாடுகள் observers ஆக பங்கேற்கின்றன.


F-35 ஏன் இவ்வளவு முக்கியமானது?

Tarang Shakti 2026-ல் அதிக கவனத்தை ஈர்க்கும் aircraft எதுவென்றால் அது அமெரிக்காவின் F-35 Lightning II.

 F-35 ஒரு fifth-generation stealth fighter aircraft.

stealth capability F-35-ன் முக்கிய அம்சங்களில் ஒன்று .

Aircraft-ன் radar signature-ஐ Stealth technology குறைப்பதனால், எதிரியின் radar systems-க்கு aircraft-ஐ detect மற்றும் track செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இதற்கு முன்பு Aero India 2023 மற்றும் 2025 நிகழ்ச்சிகளில் இந்தியாவுக்கு வந்த F-35,Tarang Shakti 2026-ல் தான் இந்திய விமானப்படையுடன் இணைந்து exercise செய்ய உள்ளது.

ஆனால் Tarang Shakti 2026-ல் F-35 பங்கேற்பதன் முக்கியத்துவம் அதன் technology மட்டுமல்ல.

Indian Air Force முதல் முறையாக F-35 உடன் ஒரு multinational air exercise-ல் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

இதனால் இந்திய விமானப்படைக்கு ஒரு advanced fifth-generation fighter உடன் complex multinational operations-ல் பணியாற்றும் அனுபவம் கிடைக்கும்.


Rafale, F-16, Tejas – ஏன் ஒரே exercise-ல்?

Tarang Shakti-ன் இன்னொரு முக்கியமான அம்சம் பல்வேறு நாடுகளின் வேறுபட்ட fighter platforms உடன் இணைந்து ஒன்றாக செயல்படுவது.

🇫🇷 France – Rafale

France தனது Rafale fighter aircraft-ஐ கொண்டு வருகிறது.

இந்திய விமானப்படையிலும் Rafale aircraft உள்ளது.

எனவே இந்திய Rafale மற்றும் French Rafale ஆகியவை multinational environment-ல் operating experience-ஐ பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இந்த பயிற்சியில் கிடைக்கும்.

🇦🇪 UAE – F-16

UAE தனது F-16 aircraft-களுடன் பங்கேற்கிறது.

இதன் மூலம் இந்திய விமானப்படைக்கு வேறு ஒரு advanced fighter platform உடன் training மற்றும் tactical interaction அனுபவமும் கிடைக்கும்.

🇮🇳 India – Tejas

இந்தியாவின் indigenous Tejas fighter aircraft-ம் இந்த exercise-ல் பங்கேற்கிறது.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால், India தனது சொந்த fighter platform-ஐ உலகின் பல advanced air forces உடன் ஒரே multinational operational environment-ல் பயன்படுத்துவது.

இதனால் Tejas-ன் operational integration மற்றும் இந்தியாவின் indigenous aerospace capability ஆகியவை சர்வதேச கவனத்தை ஈர்க்க உதவும்.


இந்தியா எந்த aircraft-களை பயன்படுத்துகிறது?

Tarang Shakti 2026-ல் Indian Air Force பல்வேறு combat மற்றும் support aircraft-களை பயன்படுத்த உள்ளது.

அதில் முக்கியமானவை:

  • Rafale

  • Tejas

  • Su-30MKI

  • MiG-29

  • Mirage-2000

  • Jaguar

இதனுடன் transport aircraft, helicopters, AWACS மற்றும் air-to-air refuelling aircraft போன்ற support platforms-களும் exercise-ல் பங்கேற்க உள்ளன.

இதனால் இது வெறும் fighter aircraft exercise அல்ல.

ஒரு முழுமையான air warfare environment-ஐ simulate செய்யும் வகையில் பல வகையான aircraft மற்றும் support systems இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.


Tarang Shakti 2026-ன் முக்கிய நோக்கம் என்ன?

இந்த exercise-ன் மிக முக்கியமான வார்த்தை:

Interoperability

Interoperability என்றால் வெவ்வேறு நாடுகளின் military forces ஒன்றுடன் ஒன்று திறம்பட இணைந்து செயல்படும் திறன்.

உதாரணமாக,

ஒரு multinational operation-ல் இந்திய aircraft, French aircraft, American aircraft மற்றும் UAE aircraft ஆகியவை ஒன்றாக செயல்பட வேண்டியிருந்தால்,

  • Communication எப்படி இருக்கும்?

  • Mission planning எப்படி இருக்கும்?

  • Aircraft coordination எப்படி இருக்கும்?

  • Airspace management எப்படி இருக்கும்?

  • Different tactics-ஐ எப்படி ஒருங்கிணைப்பது?

  • Intelligence மற்றும் situational awareness-ஐ எப்படி பகிர்வது?

போன்ற பல விஷயங்களை முன்கூட்டியே practice செய்ய வேண்டும்.

இதற்கான ஒரு realistic training environment-ஐ Tarang Shakti 2026 வழங்குகிறது.


ஏன் Multinational Air Exercise தேவை?

Modern air warfare-ல் ஒரு fighter aircraft மட்டும் தனியாக செயல்படுவதைக் காட்டிலும், AWACS, intelligence, air defence, electronic warfare, refuelling, drones மற்றும் பிற support systems ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியமானதாக உள்ளது.

Modern warfare-ல்,

Fighter Aircraft + AWACS + Drones + Air Defence + Satellites + Intelligence + Electronic Warfare + Refuelling + Precision Weapons

போன்ற பல systems ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு fighter jet-ஆல் தனது இலக்கை இலகுவாக தாக்க முடியும்.

இதனால் ஒரு நாட்டின் air force மற்றொரு நாட்டின் air force-உடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கு முன்பே இவ்வாறான பயிற்சியில் ஈடுபடுவது அந்த நாடுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.

 அந்த operational experience-ஐ வழங்குவதற்காக தான்  Tarang Shakti போன்ற exercises-கள் நடைபெறுகின்றன.


Tarang Shakti 2024 முதல் Tarang Shakti 2026 வரை

Tarang Shakti முதன்முதலில் 2024-ல் நடத்தப்பட்டது.

2024 edition இந்தியாவின் முதல் multinational air exercise ஆகும். அந்த exercise-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று participating friendly foreign countries இடையே interoperability மட்டுமல்லாமல் operational coordination-ஐயும் மேம்படுத்துவது.

2024 exercise-ன் போது, Jodhpur-ல் நடைபெற்ற Air Domain Awareness symposium-ல் 27 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட delegates பங்கேற்றனர்.

2026 edition அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக வருகிறது.

இதற்கு முன்பு bilateral exercise-இல்  கவனம் செலுத்தி வந்த இந்தியா தற்போது பல நாடுகளின் air forces-ஐ ஒரே operational environment-ல் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவுக்கு என்ன பயன்?

Tarang Shakti 2026 இந்தியாவுக்கு பல வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது.

1. Operational Learning

வெவ்வேறு நாடுகளின் air forces பயன்படுத்தும் tactics மற்றும் procedures-ஐ இந்திய விமானப்படை observe செய்து கற்றுக்கொள்ள முடியும்.

2. Interoperability

பல நாடுகளின் aircraft மற்றும் systems ஒன்றாக செயல்படுவதற்கான அனுபவம் கிடைக்கும்.

3. Modern Air Warfare Training

Air-to-Air மற்றும் Surface-to-Air weapons போன்ற modern warfare challenges-ஐ எதிர்கொள்ளும் tactical approaches-ஐ பயிற்சி செய்ய முடியும்.

4. Defence Cooperation

பல்வேறு நாடுகளுடனான military-to-military cooperation அதிகரிக்கும்.

5. Indigenous Capability

Tejas போன்ற இந்தியாவின் indigenous platforms-ஐ international operational environment-ல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது.


இது ஒரு Air Show அல்ல

Tarang Shakti-யை வெறும் air show என்று கருதுவது தவறு.

Air show-ல் aircraft-கள் தங்களுடைய flying capabilities-ஐ display செய்வது முக்கியமாக இருக்கும்.

ஆனால் military exercise-ல் முக்கியமானது:

Planning → Execution → Coordination → Tactical Learning → Debrief → Improvement

என்பதாகும்.

Tarang Shakti 2026-ன் முக்கிய நோக்கம்.

பங்கேற்கும் நாடுகள் ஒன்றாக operations plan செய்து, அதை execute செய்து, அதிலிருந்து தங்களுக்கான பாடங்களை கற்றுக் கொள்வது.


India-வின் Defence Diplomacy-க்கு இது எப்படி தொடர்புடையது?

ஒரு நாட்டின் military strength என்பது weapons மற்றும் aircraft எண்ணிக்கையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.

அந்த நாடு மற்ற நாடுகளின் military forces உடன் எவ்வளவு திறமையாக cooperate செய்ய முடியும் என்பதையும் மற்ற நாடுகள் அவசியமானதாக கருதுவதால்.

India–USA defence cooperation-ஐ புரிந்துகொள்ள, [Yudh Abhyas 2026] பற்றிய எங்கள் கட்டுரையையும் படிக்கலாம்.

2024-ல் Tarang Shakti-யை நடத்தத் தொடங்கிய India, 2026-ல் மேலும் விரிவான multinational participation-ஐ கொண்டு வந்துள்ளது.

பல நாடுகளுடன் operational relationships-ஐ வலுப்படுத்த இந்தியாவிற்கு Tarang Shakti போன்ற multinational exercises-கள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றது.


ஏன் Jodhpur?

இந்த exercise-ன் முக்கிய location Jodhpur, Rajasthan.

Jodhpur பகுதியில் உள்ள air bases மற்றும் Rajasthan-ன் desert environment ஆகியவை large-scale air operations மற்றும் tactical training-க்கு பயன்படுத்தப்படுகின்றன.

2026 exercise-ன் main activities Air Force Station Jodhpur மற்றும் அதனைச் சுற்றியுள்ள air bases-ல் நடைபெற உள்ளன.


Tarang Shakti 2026 – முக்கிய Facts

Exercise: Tarang Shakti 2026
Edition: 2nd edition
Hosted by: Indian Air Force
Location: Jodhpur, Rajasthan
Dates: 26 September – 12 October 2026
Foreign air forces: Australia, Bangladesh, France, Germany, Greece, Sri Lanka, UAE, USA
Observer nations: 32
Major aircraft: F-35, Rafale, F-16, Tejas, Su-30MKI, Mirage-2000, MiG-29, Jaguar
Main focus: Multinational operations, interoperability, tactical learning and operational preparedness.


Tarang Shakti 2026 என்பது F-35, Rafale அல்லது F-16 போன்ற fighter jets ஒன்றாக இந்தியாவில் பறப்பதை மட்டும் பற்றிய exercise அல்ல.

அதன் பின்னால் இருக்கும் முக்கிய விஷயம் multinational air warfare training.

ஒரே exercise-ல் பல நாடுகளின் air forces இணைந்து செயல்படும்போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் tactics, procedures மற்றும் operational practices-லிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

அதனால் Jodhpur-ல் நடைபெற உள்ள Tarang Shakti 2026, இந்தியாவின் air power மட்டும் அல்லாமல் international military cooperation, interoperability மற்றும் modern air warfare preparedness ஆகியவற்றை புரிந்துகொள்ள முக்கியமான defence current affairs topic ஆகும்.

26 September 2026 முதல் exercise தொடங்கிய பிறகு, எந்த aircraft எவ்வாறு பங்கேற்கிறது, என்னென்ன operations நடைபெறுகின்றன, இந்திய விமானப்படைக்கு என்ன tactical lessons கிடைக்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களாக இருக்கும்.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]