Donald Trump-ன் முகம் கொண்ட புதிய Trump $1 coin 2026-ல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு உலகளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது
ஏன் இந்த ஆர்வம்?
ஆர்வத்தின் பிண்ணனி
- “அமெரிக்கப் பணத்தில் (Currency) உயிருடன் இருக்கும் President-ன் படம் எப்படி வந்தது?”
- “இந்த coin உண்மையில் $1 மதிப்புடையது தானா?”
- ”$1 coin-ஐ ஏன் U.S. Mint அதிகமான விலைக்கு விற்கிறது?”
- ”இந்த coin தங்கமா?”
- “ எதிர்காலத்தில் இந்த coin-ன் மதிப்பு அதிகரிக்குமா?”
என்ற பல கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
முதலில் நாம்
- Trump $1 coin என்றால் என்ன?
- அதன் design
- அதன் உண்மையான மதிப்பு
- ஏன் இது 2026-ல் வெளியிடப்பட்டது
- மேலும் இதைச் சுற்றியுள்ள சட்ட விவாதம் என்ன? என்பதை இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
Trump $1 coin என்றால் என்ன?
2026-ம் ஆண்டில் United States Mint வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வமான அமெரிக்க $1 coin தான் இந்த Trump $1 coin.
இது சாதாரணமாக தனியார் நிறுவனம் உருவாக்கிய நினைவுப் பதக்கமோ அதாவது tokenஓ அல்லது நினைவு நாணயமோ அல்லது Trump-ன் Bitcoinஓ அல்ல.
United States Mint (official coin-producing agency) என்பது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நாணயங்களை தயாரிக்கும் அரசு நிறுவனம். அமெரிக்கா 2026-ல் தனது 250-வது ஆண்டு நிறைவை அதாவது — Semiquincentennial — கொண்டாடுகிறது.
அந்த 250-வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக 2026-ம் ஆண்டில் சில அமெரிக்க coins-ன் design-களில் சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
அப்படி வெளியிடப்பட்ட series-ல் President Donald J. Trump-ன் portrait கொண்ட இந்த $1 coin-ம் இடம்பெற்றுள்ளது.
ஏன் 2026-ல் இந்த coin வெளியிடப்பட்டது?
இதற்கு முக்கியமான காரணம் 1776-ம் ஆண்டில் அமெரிக்கா Declaration of Independence-ஐ (விடுதலைப் பிரகடனத்தை) ஏற்றுக்கொண்டது.
1776-ம் ஆண்டிலிருந்து 2026 ஆம் ஆண்டில் 250 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
அதனால் U.S. Mint 2026-ம் ஆண்டிற்காக பல coins-ல் “1776 ~ 2026” என்ற dual date-ஐ பயன்படுத்தியுள்ளது.
Semiquincentennial celebration-ன் ஒரு பகுதியாக Trump $1 coin-ஐ வெளியிட்ட U.S. Mint-ன் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த $1 coin ஒரு வருடத்திற்கு மட்டும் வழங்கப்படும் வகையில் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த Coin-ல் என்ன இருக்கிறது?
Coin-ன் முகப்புப் பக்கத்தில், அதாவது obverse-ல் Donald Trump-ன் portrait இடம்பெற்றுள்ளது.
அதனுடன் சேர்த்து மூன்று முக்கிய inscriptions-ம் இடம்பெற்றுள்ளன:
- LIBERTY
- IN GOD WE TRUST
- 1776 ~ 2026
Trump-ன் portrait-ஐ United States Mint Chief Engraver Joseph Menna வடிவமைத்துள்ளார்.
இதற்காகப் பயன்படுத்தப்பட்ட குறிப்புப் புகைப்படம் (reference photograph), வெள்ளை மாளிகையின் புகைப்படக் கலைஞர் டேனியல் டோரோக் (Daniel Torok) எடுத்த அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகைப் (White House photograph) புகைப்படமாகும்.
Coin-ன் பின்புறத்தில் என்ன இருக்கிறது?
Coin-ன் reverse side-ல் Donald Trump-ன் portrait-க்கு பதிலாக United States Presidential Seal இடம்பெற்றுள்ளது.
அதில் eagle, olive branch மற்றும் arrows போன்ற symbols-ம் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்க eagle-ன் shield பகுதியில் 250 என்ற எண் இடம்பெற்றுள்ளது.
மேலும் UNITED STATES OF AMERICA ONE DOLLAR என்ற inscriptions-ம் உள்ளன.
இந்த coin தங்கமா ?
இல்லை.
பலரும் தவறாக எண்ணும் விஷயம் இதுதான்
இந்த coin தங்கமா ? என்று
Philadelphia Mint-ல் தயாரிக்கப்பட்ட Trump $1 coin பார்ப்பதற்கு தங்கம் போன்று தோன்றினாலும், டிரம்ப் என்ற தங்கத்தின் முகத்தை தவிர வேறு எந்த ஒரு உலோக தங்கமும் அதில் சேர்க்கப்படவில்லை.
8.1 gram எடை, 26.49 mm விட்டம் கொண்ட coin-ல் U.S. Mint கொடுத்த specifications படி
- 88.5% Copper
- 6% Zinc
- 3.5% Manganese
- 2% Nickel
போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
24-karat gold proof coin ஒன்றையும் U.S. Mint வெளியிடும் திட்டத்தில் உள்ளது. $1 coin-லிருந்து முற்றிலும் வேறுபட்ட அந்த gold proof coin November 5, 2026 அன்று வெளியிட U.S. Mint schedule-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது $1 Trump coin-ன் தங்கப் பதிப்பு அல்ல; தனியாக வெளியிடப்படும் 1 Troy Ounce 24-karat Gold Proof Coin — ஒரு அவுன்ஸ் தூய தங்கத்தால் தயாரிக்கப்படும் தனி நாணயம்.
1 ட்ராய் அவுன்ஸ் (Troy Ounce) எடை கொண்ட .9999 fine (24-karat) தூய தங்கத்தால் உருவாக்கப்படும் இந்த coin-ன் முகமதிப்பு $250.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அமெரிக்க நாணய வரலாற்றில் $250 முக மதிப்புடன் வரும் இந்த நாணயம் அபூர்வ நாணயங்களில் ஒன்றாக கருதப்படும்.
$1 coin-ன் விலை ?
Coin-ன் face value $1.
25-Coin கொண்ட ஒரு Roll-ன் Mint price: $61
25-Coin கொண்ட ஒரு Roll ஆக வாங்கினால் ஒரு coin- ன் விலை $2.44.
100-Coin கொண்ட ஒரு Bag-ன் Mint Price: $154.50
100-Coin கொண்ட ஒரு Bag ஆக வாங்கினால் ஒரு coin- ன் விலை $1.55.
ஏன் இந்த விலை ஏற்றம் ?
Mint இந்த coin-களை circulating finish — பொதுவான புழக்கத்திற்கான தரத்துடன் தயாரித்து, collectors — நாணய சேகரிப்பாளர்களுக்கான rolls மற்றும் bags ஆக விற்பனை செய்கிறது. இந்த பிரத்யேக பேக்கிங், உற்பத்தி முறை மற்றும் பாதுகாப்புச் செலவுகள் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
அப்படியானால் $1 முகமதிப்பு கொண்ட coin-ஐ ஏன் $1-க்கும் அதிகமான விலைக்கு விற்கிறார்கள்?
U.S. Mint இதை collector product — சேகரிப்பாளர்களுக்கான பொருளாக rolls மற்றும் bags வடிவில் விற்பனை செய்கிறது. 25-coin roll $61 என்றும், 100-coin bag $154.50 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு coin-ன் face value — முகமதிப்பு மற்றும் Mint-ன் collector-sale price — சேகரிப்பாளர் விற்பனை விலை ஆகிய இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
Mint-ல் அதிக விலை கொடுத்து வாங்கினாலும், அந்த coin-ன் பண மதிப்பு (spending value) எப்போதும் $1 மட்டுமே; மீதமுள்ள கூடுதல் தொகை அந்த நாணயத்தின் "சேகரிப்பு மதிப்புக்கான" (collector/numismatic premium) கட்டணமாகும்.
இந்த coin-ஐ யார் வாங்கலாம்?
பொதுமக்கள் மற்றும் நாணய சேகரிப்பாளர்கள் U.S. Mint-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (usmint.gov) வாயிலாக எந்த ஒரு பிரத்யேக உரிமமோ அல்லது நாணய டீலர் அங்கீகாரமோ இல்லாமல் நேரடியாக இந்த Coin-ஐ வாங்கலாம்.
Trump $1 coin-ன் நிலை
இந்த coin-கள் "circulating finish" கொண்டவையாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக Uncirculated நிலையிலேயே இருக்கும்.
அதாவது இவை சாதாரண மக்களின் கைகளுக்கோ, கடைகளின் பணப்பெட்டிகளுக்கோ இந்த coin-ஆல் செல்ல முடியாது.
Mint-ல் இருந்து பிரீமியம் விலைகொடுத்து அதாவது Coin-ன் face value $1க்கு அதிகமான விலை கொடுத்து வாங்கும் எவரும் அந்த coin-களை பிரித்து டீக்கடையிலோ அல்லது மளிகைக் கடையிலோ சில்லறையாகச் செலவழிக்க மாட்டார்கள்.
U.S. Mint குறிப்பிடுவது போல, இந்த நாணயங்கள் சட்டப்பூர்வமான பணம்தான் (Legal Tender) என்றாலும் 1$ Face value coin- ஐ கொண்டு ஒரு பொருளை வாங்க முயன்றால், சட்டப்படி அதன் முகமதிப்புக்கு (Face value) அது செல்லும். ஆனால், வாங்கிய அசல் விலையை விட முகமதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்பதால் எவரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
அதனால் Mint-ல் premium விலையில் வாங்கப்பட்ட இந்த coins-ஐ பல collectors செலவழிப்பதை விட collection-ல் வைத்திருக்கவே விரும்புவார்கள்.
July 4 Trump $1 coin-ன் Treasure Hunt
இந்த Trump $1 coin-ல் collectors-க்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் ஒரு special version உள்ளது.
2026 July 4 அன்று Philadelphia Mint-ல் 250,000 Trump $1 coins தயாரிக்கப்பட்டன.
அந்த coins-ல் special “July 4th” privy mark உள்ளது.
இந்த special coins தனியாக ஒரு separate product ஆக விற்கப்படாமல்.
அவை U.S. Mint விற்ற rolls மற்றும் bags-க்குள் random-ஆக சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த special-marked coins collectors மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
“Privy mark” என்றால் என்ன?
Privy mark என்பது ஒரு coin-ல் சிறப்பு நோக்கத்திற்காக சேர்க்கப்படும் சிறிய அடையாளம்.
இந்த Privy mark அந்த coin-ன் முக்கிய design-ஐ மாற்றாமல், குறிப்பிட்ட event, anniversary அல்லது special issue-ஐ அடையாளப்படுத்த உதவும்.
Trump $1 coin-ன் special version-ல் July 4th என்ற mark பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது 2026 July 4 அன்று அந்த coins உற்பத்தி செய்யப்பட்டதை குறிக்கிறது.
இந்த coin ஏன் இவ்வளவு முக்கியமாக பேசப்படுகிறது?
அமெரிக்க நாணயங்கள் (Coins) மற்றும் காகிதப் பணத்தில் (Currency notes) உயிருடன் இருக்கும் நபர்களின் உருவங்களை அச்சிடுவதைத் தவிர்ப்பது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் தொடக்க காலம் முதலே ஒரு முக்கிய கொள்கையாகவும், பின்னர் சட்டப்பூர்வ வரம்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் Donald Trump ஒரு sitting U.S. President ஆக இருக்கும் இந்த நேரத்தில் அவரது portrait ஒரு U.S. circulating coin design-ல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை மட்டுமல்லாமல் விவாதத்தையும் சேர்த்து ஏற்படுத்தி உள்ளது.
Trump Dollar Coin தயாரிப்பதற்கு எதிராக இடைக்கால தடை வேண்டி ஜேம்ஸ் ரிகர் (James Rickher) என்பவர் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரருக்கு இந்த நாணய வெளியீட்டால் நேரடியான, ஈடுசெய்ய முடியாத தனிப்பட்ட பாதிப்பு (Standing / Irreparable Harm) ஏற்படவில்லை என்பதால் அவசர இடைக்காலத் தடையை மறுத்துவிட்டனர் (Preliminary Injunction Denial).
1866-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் (Thayer Amendment - 31 U.S.C. § 5114) உயிருடன் இருக்கும் நபர்களின் உருவத்தை அமெரிக்க அதிகாரப்பூர்வ கரன்சியில் அச்சிடத் தடை செய்கிறது. அரசுத் துறை தனது அதிகாரத்தை மீறுகிறது என்பதே மனுதாரரின் வாதம்.
சட்ட சர்ச்சை (Legal controversy / Ongoing litigation)
தடை மறுப்பு மட்டுமே, ஒப்புதல் அல்ல: ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீதிமன்றம் இடைக்காலத் தடை (preliminary injunction) விதிக்க மறுத்தது என்பது, "உற்பத்தி சட்டபூர்வமானது" அல்லது "நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்கிறது" என்ற பொருளைத் தராது. இடைக்கால நிவாரணத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை என்பதை மட்டுமே அது குறிக்கிறது.
இறுதித் தீர்ப்பு இல்லை: வழக்கின் முழுமையான தகுதிகள் (merits) ஆராயப்பட்டு இறுதியாகத் தீர்க்கப்படாத வரை, நீதிமன்றம் ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதாகக் எடுத்துக் கொள்ள முடியாது.
இறுதியாக நீதிமன்றம் இந்த Trump 1$ coin உற்பத்திக்கு ஆதரவும் தரவில்லை, coin உற்பத்திக்கு தடையும் வழங்கவில்லை.
Trump $1 coin ஒரு நல்ல investment-ஆ?
1$ face value கொண்ட coin-ஐ அதிக விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று உறுதியாக நம்ப முடியாது.
July 4th privy mark கொண்ட நாணயங்கள் வெளியாகும் ஆரம்பக் காலத்தில் அதிக "ஹைப்" (hype) பெற்றாலும்.
- நிலையான நுகர்வோர் தேவை
- Mint-ன் உற்பத்தி எண்ணிக்கை (mintage limit)
- சேகரிப்பாளர்களின் நீண்ட கால ஆர்வம்
போன்ற காரணங்களே எதிர்காலத்தில் அதன் விலையை தீர்மானிக்கும்.
Trump $1 coin-ன் எதிர்கால மதிப்பை சோசியல் மீடியாவால் தீர்மானிக்க இயலாது மாறாக
PCGS, NGC போன்ற grading நிறுவனங்களால் MS-70 அல்லது PR-70 போன்ற உயர்ந்த grade பெறும் coins சில நேரங்களில் collectors மத்தியில் கூடுதல் premium பெறலாம். சிறிய கீறல் (hairline scratch) இருந்தாலும் மதிப்பு பெருமளவு சரியும். ஆனால் ஒரு உயர்ந்த grade மட்டுமே எதிர்கால விலையை உறுதி செய்யாது. Rarity, population, demand, condition மற்றும் market interest ஆகியவை முக்கியம்.
அதே கிரேடில் எத்தனை நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன (survival/population rate) என்பதே உண்மையான rarity-யைத் தீர்மானிக்கும்.
குறிப்பாக நீங்கள் விற்க நினைக்கும்போது, நீங்கள் கேட்கும் விலைக்கு வாங்கக்கூடிய ஒரு சேகரிப்பாளர் சந்தையில் இருக்க வேண்டும்.
நவீன கால "special edition" நாணயங்களை எப்போதும் ஒரு பொழுதுபோக்காகவும் கலைப் பொருளாகவுமே பார்க்க வேண்டும்; உறுதியான வருமானம் தரும் முதலீடாகப் பார்க்கக் கூடாது பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
Trump $1 coin-ஐப் பற்றி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்
- இது United States Mint — அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நாணயத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட official $1 coin அதிகாரப்பூர்வமான $1 நாணயம்.
- இது 2026-ம் ஆண்டின் America 250th anniversary celebration-ன் ஒரு பகுதியாகும்.
- Front side-ல் Donald Trump portrait உள்ளது.
- Reverse side-ல் Presidential Seal உள்ளது.
- இது gold coin அல்ல; copper-based alloy பயன்படுத்தப்பட்டுள்ளது.
- Coin-ன் face value $1 என்றாலும் Mint collector rolls மற்றும் bags-ன் selling price அதைவிட அதிகம்.
- 250,000 coins-ல் special July 4th privy mark உள்ளது.
இந்தியாவில் இருப்பவர்கள் இதைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
- இந்திய வாசகர்களுக்கு இது ஒரு U.S. coin story போலத் தோன்றலாம்.
- ஆனால் இதன் பின்னால் சில பெரிய concepts உள்ளன.
- ஒரு நாட்டின் currency-ல் யாருடைய portrait இடம்பெறலாம்?
- Central government அல்லது mint எப்படி coins-ஐ issue செய்கிறது?
- Face value மற்றும் collector value இடையே என்ன difference?
- ஒரு coin-ன் design-க்கு பின்னால் சட்டம் எப்படி செயல்படுகிறது?
- ஒரு historical anniversary-ஐ currency மூலம் எப்படி நினைவுகூர்கிறார்கள்?
- இவை அனைத்தும் economics, history, law மற்றும் current affairs ஆகியவற்றுடன் தொடர்புடைய concepts.
- அதனால் Trump $1 coin என்பது “ஒரு நாட்டின் currency-யை உருவாக்குவது எப்படி?” என்ற பெரிய கேள்விக்கு விடை தரும் சட்டரீதியான மற்றும் வரலாற்று ரீதியான பாடமாகப் பார்க்கப்பட வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Trump $1 coin உண்மையான அமெரிக்க coin-ஆ?
ஆம். இது United States Mint வெளியிட்ட official $1 coin ஆகும்.
Trump $1 coin தங்கத்தால் செய்யப்பட்டதா?
இல்லை. இந்த $1 coin copper-based alloy-ஆல் தயாரிக்கப்பட்டது. தனியாக 24-karat gold Trump proof coin ஒன்றும் 2026-ல் திட்டமிடப்பட்டுள்ளது.
Trump $1 coin-ன் face value என்ன?
$1.
U.S. Mint 25 coins-ஐ எவ்வளவு விலைக்கு விற்றது?
25-coin roll $61-க்கு விற்பனை செய்யப்பட்டது.
100 coins bag-ன் விலை என்ன?
$154.50.
July 4th Trump coin என்றால் என்ன?
2026 July 4 அன்று உற்பத்தி செய்யப்பட்ட 250,000 coins-ல் special “July 4th” privy mark உள்ளது.
இந்த coin future-ல் அதிக விலை பெறுமா?
அதை உறுதியாகக் கூற முடியாது. Future collector value market demand, rarity, condition மற்றும் authentication போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.
Trump $1 coin circulation-ல் உள்ளதா?
U.S. Mint விற்ற rolls மற்றும் bags-ல் உள்ள coins circulating finish கொண்டவை; ஆனால் அந்த particular Mint products-ல் உள்ள coins பொதுவான circulation-க்கு விடப்படவில்லை. அவை legal tender ஆகும்.
No comments:
Post a Comment