AI-generated illustrative image. Not an actual photograph of Yudh Abhyas 2026.
நவீன போர்க்களத்தில் வேகமாக வளர்ந்து வரும் technology மற்றும் unmanned systems-ன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முறை 'Yudh Abhyas வெறும் ராணுவ பயிற்சியாக மட்டுமில்லாமல் மலைப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுவது, drones, autonomous systems, counter-drone technology மற்றும் multi-domain warfare போன்ற நவீன போர்த் தொழில் நுட்பங்களை எவ்வாறு கையாள்வது போன்ற போர் முறைகளுக்கு இந்த முறை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயரமான மலைப் பகுதிகளில் போர் புரியும் முறையை கற்றுக் கொள்வதற்காகவே Auli மற்றும் Rajasthan-ல் உள்ள Mahajan Field Firing Range
என்ற இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பயிற்சி இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது
Auli என்ற உயரமான மலைப்பகுதி.
இந்த போர் பயிற்சிக்கான தொடக்க விழா செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள Auli Foreign Training Node இல் தொடங்கப்பட்டது
அதே நேரத்தில் Rajasthan-ல் உள்ள Mahajan Field Firing Range பகுதியில் நவீன ஆயுத அமைப்புகள் மற்றும் live-fire தொடர்பான பயிற்சிகளும் தொடங்கப்பட்டன.
பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்:
இந்திய ராணுவத்தின் 14-வது காலாட்படைப் பிரிவு (14 Infantry Division) தளபதி மேஜர் ஜெனரல் அமரேஷ் குஞ்சன்.
அமெரிக்க ராணுவத்தின் 11-வது ஏர்போர்ன் டிவிஷன் (11th Airborne Division), 1-வது காலாட்படை பிரிகேட் காம்பாட் டீம் கமாண்டர் கர்னல் பெஞ்சமின் ஜேக்மேன்.
ஆயுதங்களுடன் இணையும் நவீன Technology
இந்தியாவிலிருந்து சுமார் 600 வீரர்களும், அமெரிக்காவிலிருந்து சுமார் 600 வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு பயிற்சியில் technology infusion-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Drones மற்றும் autonomous systemsத்தின் துணை கொண்டு போர்க்களத்தில் எதிரிகளின் நிலையை, மனித வீரர்கள் நேரடியாகச் சென்று பார்ப்பதற்குப் பதிலாக, unmanned systems மூலம் surveillance மற்றும் reconnaissance செய்யும் திறனை இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
இந்தப் பயிற்சியின் போது technology என்பது வெறும் drones-க்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்படவில்லை. Auli பகுதியில் நடைபெற்ற ஒரு counterterrorism building-clearing demonstration-ல் Indian மற்றும் U.S. Army வீரர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். இதில் snipers, Army canines மற்றும் robotic dog போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் மனித வீரர்களுடன் modern unmanned systems மற்றும் specialised capabilities எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதையும் பயிற்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒருவேளை இதேபோன்று எதிரிகளின் Drone கள் நம் நாட்டு வீரர்களின் நிலையை அறிந்து கொள்ள முயன்றால். அந்த எதிரிகளின் Drone களை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வதற்கான counter-unmanned aircraft system பயிற்சிக்கு இந்த ஆண்டு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளிடம் இருந்த போர்க்களம் தற்போது
Drone → surveillance → data → command → weapon system
என்ற ஒரு முழுமையான technology chain என்ற நவீன போர்க்களமாக பரிணமித்துள்ளது.
இதனால்தான் இருநாட்டு நிபுணர்களும்
drones மற்றும் autonomous systems போர் பயிற்சியோடு நின்றுவிடாமல் multi-domain warfare பற்றியும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டுள்ளனர்.
IBG மற்றும் Interoperability
Integrated Battle Group (IBG) என்பது பல்வேறு ராணுவப் பிரிவுகள் மற்றும் திறன்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட operation-ஐ மேற்கொள்ளும் அமைப்பு.
அதாவது ஒரு ராணுவத்தில் infantry என்ற காலாட்படைக்கு சரியான நேரத்தில்
Artillery support
Intelligence
Drones
Communication systems
Engineers
Fire support
Command units
போன்ற பல்வேறு திறன்களின் ஒருங்கிணைந்த ஆதரவு கிடைத்தால் மட்டுமே காலாட்படையின் முழு பலமும் வெளிப்படும்.
Integrated என்ற வார்த்தையின் அர்த்தம் இதுதான்.
உதாரணத்திற்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள எதிரியின் நிலையை கைப்பற்ற காலாட்படை வீரர்கள் மட்டும் மலையை நோக்கி சென்றால் மட்டும் போதாது, எதிரியின் நிலை பற்றிய முழுமையான தகவல்கள் அவர்களிடம் இருக்க வேண்டும்.
எதிரியின் நிலையை நோக்கிய பயணத்துக்கு முன்பாக:
Drone → எதிரியின் நிலையை கண்டறிய வேண்டும்
↓
Intelligence → அந்த தகவலை ஆய்வு செய்து
↓
Command → என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்
↓
Artillery / Fire support → தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம்
↓
Infantry → தரையில் முன்னேறும்
இவ்வாறு ராணுவத்தில் இருக்கும் பல பிரிவுகளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றிணைத்து செயல்படுத்த உதவும் அமைப்பு IBG என்ற Integrated Battle Group.
இதற்கும் Yudh Abhyasக்கும் என்ன சம்பந்தம்?
Yudh Abhyas என்பது இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து நடத்தும் பயிற்சி.
இரு நாடுகளின் வீரர்களும் வெவ்வேறு ராணுவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள், அவர்கள் வேறுபட்ட communication procedures, equipment மற்றும் operating methodsய் பயன்படுத்துவார்கள்.
இரு நாடுகளின் வீரர்களும் ஒன்றாக ஒரு operation நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட Interoperability தேவைப்படும்.
Interoperability = வெவ்வேறு ராணுவப் படைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து திறம்பட செயல்படும் திறன்.
உதாரணத்திற்கு இந்திய வீரர்கள் அனுப்பும் தகவலை அமெரிக்க வீரர்கள் புரிந்து கொண்டு தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் coordinate ஆக இந்திய ராணுவமும் தங்களின் நடவடிக்கையைத் தொடர வேண்டும்.
இதைத்தான் interoperability என்கிறார்கள்.
இதை ஒரு flow-ஆக பார்த்தோமானால்
Planning
திட்டமிடுதல்
↓
Communication
தகவல் பரிமாற்றம்
↓
Command
முடிவு / கட்டளை
↓
Movement
வீரர்கள் மற்றும் படைகளின் நகர்வு
↓
Fire Support
தேவையான ஆயுத ஆதரவு
↓
Battlefield Coordination
போர்க்களத்தில் ஒருங்கிணைப்பு
இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் இரு நாடுகளின் படைகளும் ஒரு கூட்டு நடவடிக்கையில் திறம்பட செயல்பட முடியும்.
மலைப்பகுதியை பொறுத்தவரை ராணுவ நடவடிக்கைகள் சமவெளியை விட சிக்கலானதாக இருக்கும்.
இந்த பயிற்சியின் மற்றொரு முக்கியமான நோக்கம் யாதெனில் மலை மற்றும் semi-mountainous terrain-ல் infantry-dominated operations நடத்துவதற்கான joint capability-ஐ மேம்படுத்துவது.
மலைப்பகுதியில்,
வீரர்கள் நகர்வது கடினம்
communication சவாலாக இருக்கும்
இதற்கு வானிலை ஒரு காரணியாக இருக்கலாம்
எதிரியின் நிலையை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்
மேலும் logistics மற்றும் fire support ஒருங்கிணைப்பது அவசியம்
அதனால் மலைப்பகுதியில் infantry-dominated operations நடத்தும்போது coordination மிகவும் முக்கியமானதாகிறது.
IBG → பல்வேறு ராணுவத் திறன்களை ஒருங்கிணைத்தல்
Interoperability → வெவ்வேறு ராணுவப் படைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் திறன்.
Yudh Abhyas → India + USA Army → Joint trainingக்கு IBG மற்றும் Interoperability இரு கண்களாகும்.
இந்த ஆண்டு பயிற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் அமெரிக்காவின் 11th Airborne Division, “Arctic Angels” என்று அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
U.S. Army தகவலின்படி mountain warfare, cold-weather operations, counter-UAS training மற்றும் live-fire activities ஆகியவை பயிற்சியின் முக்கியமான பகுதிகளாகும்.
மேலும் Mahajan Field Firing Range-ல் HIMARS, Stinger மற்றும் M-LIDS போன்ற அமெரிக்க அமைப்புகள் தொடர்பான live-fire trainingகும் இடம்பெறுகிறது.
செப்டம்பர் 28 அன்று நிறைவடையும் Yudh Abhyas 2026 “ என்ற இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்களுக்கிடையான போர் பயிற்சி, இரு ராணுவங்களும் புதிய battlefield technology, mountain warfare, unmanned systems மற்றும் multi-domain operations போன்ற துறைகளில் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் ஒரு training platform ஆக உருவெடுத்துள்ளது.
நவீன போர்க்களம் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவது மட்டுமல்லாமல்.
Drones, autonomous systems, precision weapons, cyber, space மற்றும் real-time information ஆகியவை போரின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் இந்தியா–அமெரிக்கா போன்ற இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து பயிற்சி செய்வது, எதிர்கால battlefield-ல் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment